இட்லி போரடிக்குதா? லாலிபாப் இட்லி செய்யலாம் வாங்க!

தமிழர்கள் அன்றாட காலை உணவில் முக்கியமானது இட்லி. ஆனால் தொடர்ந்து இட்லி சாப்பிடுவது போரடித்தால் விதவிதமான முறைகளில் அதை செய்யலாம். லாலிபாப் இட்லி எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: அரிசி, உளுந்து, கொண்டை கடலை அல்லது காரமணி, முந்திரி, உப்பு தேவையான அளவு

அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கொண்டைக்கடலையை உப்பு போட்டு வேகவைத்து இட்லி மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மாவை சிறிய வட்ட வடிவ கப்புகளில் ஊற்றி நீராவியில் வேக வைக்க வேண்டும்.

Various source

வெந்த பின்பு அவற்றில் குச்சி சொறுகி லாலிபாப் போல சிறுவர்களுக்கு அளிக்கலாம்.

Various source

வித்தியாசமான வடிவமுள்ள பாத்திரங்களில் மாவை ஊற்றி வேகவைத்து விதவிதமான வடிவங்களில் லாலிபாப் இட்லி செய்யலாம்.