வெயிலுக்கு குளிர்ச்சியாக கேரளா பேமஸ் அவல் பால் செய்யலாம் வாங்க!

வெயில் காலத்தில் பிரபலமான சோடா சர்பத், பழ ஜூஸ் போல கேரளாவில் அவல் பால் மிகப் பிரபலம். அவல், பால், பழங்கள் கொண்டு செய்யப்படும் இந்த பானம் உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இதை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: அவல், வாழைப்பழம், பால், நெய், உலர் பழங்கள், சர்க்கரை, வேர்க்கடலை, முந்திரி,

முதலில் அவலை எடுத்து கடாயில் சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பாலை ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக காய்ச்சி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பசும்பாலுக்கு பதிலாக காய்ச்சாத தேங்காய் பாலும் பயன்படுத்தலாம்.

வேர்க்கடலை, முந்திரியை நெய் தாராளமாக சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

Various source

வாழைப்பழத்தை உரித்து சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

மசித்த வாழைப்பழத்தோடு அவல், குளிர்ந்த பால், சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.

அதன் மேல் வறுத்த முந்திரி, கடலை மற்றும் உலர் பழங்களை தூவினால் சுவையான, குளிர்ச்சியான கேரளா ஸ்டைல் அவல் பால் தயார்.