உடம்பை இரும்பாக்கும் கம்பு கொழுக்கட்டை ரெசிபி!

உடலை வலுவாக வைக்க உதவும் தானிய வகைகளில் கம்பு ஒன்று. கம்பங்கூழ், களி, இட்லி என பல பதார்த்தங்களாக செய்து சாப்பிடலாம். ஆரோக்கியமான சுவையான கம்பு கொழுக்கட்டை எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: கம்பு, சோள மாவு, வெல்லம், உளுந்து மாவு, சோயா மாவு, பச்சரிசி மாவு,

தேவையானவை: வெல்லம், பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், பால், நெய், உப்பு

வெல்லத்தை நன்றாக பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து மாவு வகைகளையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

Various Source

பின்னர் அதில் நெய் சேர்த்து பிசைந்து வேக வைக்க வேண்டும்.

Various Source

அதனுடன் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, வெல்லம் சேர்த்து கலந்து கைப்பிடியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

இட்லி பானையில் கைப்பிடி கொழுக்கட்டைகளை வைத்து வேக வைத்து எடுத்தால் சத்தான கம்பு கொழுக்கட்டை தயார்.