தித்திக்கும் பலாப்பழக் கொழுக்கட்டை வீட்டிலேயே செய்யலாம்!

கோடைக்காலம் வந்தாலே பலாப்பழ சீசனும் தொடங்கிவிடும். முக்கனிகளில் சுவையான பலாப்பழத்தை கொண்டு ருசியான கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பலாச்சுளை, அவல், வெல்லம், அரிசி மாவு, தேங்காய் துறுவல், ஏலக்காய் பொடி, நெய்

பலாச்சுளையில் கொட்டைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதனுடன் பொடித்த அவல், அரிசி மாவு சேர்த்து கிளற வேண்டும்.

பின்னர் அதனுடன் நறுக்கி வைத்த பலாச்சுளைகளை சேர்த்து நெய் ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும்.

Various Source

இறுதியாக தேங்காய் துறுவல், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி கொழுக்கட்டை உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.

அவற்றை இட்லி அவிக்கும் பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் பலாப்பழக் கொழுக்கட்டை தயார்.

இதை பூரணமாக செய்து இடியாப்ப மாவை தேய்த்து அதில் வைத்து வாழை இலையில் மூடி அவித்து பூரணக் கொழுக்கட்டையாகவும் செய்யலாம்.