சூப்பரான டேஸ்ட்டான பிரட் அல்வா செய்வது எப்படி?

சமீபமாக பிரியாணி சாப்பிட்ட பிறகு பிரட் அல்வா சாப்பிடுவது பிரபலமாகி வருகிறது. சுவையான பிரட் அல்வாவை சாப்பிட பலரும் விரும்புகின்றனர். சுவையான பிரட் அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: பிரட், பால், நெய், முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் தூள், எண்ணெய்

8 துண்டு பிரட்டை எடுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 கப் பாலை ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக கிண்டி விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

பின்னர் கடாயை வைத்து முக்கால் கப் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரை கரைந்து நல்ல கொதி வந்ததும் அதில் அரைத்து வைத்திருந்த பிரட் பொடியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின்னர் அதில் காய்ச்சி தயாரித்த பாலை சேர்த்து கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

அல்வா பதம் வந்த பிறகு ஏலக்காய் தூள், வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் நாவில் கரையும் சூப்பரான பிரட் அல்வா தயார்.

Various Source