ஆரோக்கியம் தரும் அவல் வடை செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்காக காலம் காலமாக மக்கள் சாப்பிட்டு வருபவற்றில் அவல் உணவுகளும் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவுக்கு குசேலன் கொடுத்ததும் ஒரு கை அவல்தான். அவலை வைத்து சுவையான வடை எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: 200 கிராம் அவல், 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி,

எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு

அவலை கால் மணி நேரம் ஊற வைத்து நான்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

Various source

அவலுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கெட்டியாக மாவு பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Various source

கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த மாவை தட்டையாக தட்டி போட்டு பொறிக்கவும்.

இப்போது சுவையான அவல் வடை தயார். சட்னி வைத்து சாப்பிட்டால் கூடுதல் சுவை தரும்.