வீட்டில் செய்ய சூப்பர் நொறுக்குத்தீனி! பட்டர் முறுக்கு செய்வது எப்படி?

வீட்டில் செய்து வைத்து பல நாட்கள் வைத்து சாப்பிட ஏற்ற பலகாரங்களில் முறுக்கும் ஒன்று. கடுகடுவென இல்லாமல் கடித்து சாப்பிட சூப்பராக இருக்கும் பட்டர் முறுக்கு பலருக்கும் பிடிக்கும். அதை வீட்டிலேயே எப்படி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, வெண்ணெய், சீரகம், ஓமம், எள்ளு, பெருங்காயம், உப்பு

முதலில் பச்சரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் சீரகம், ஓமம், உப்பு சேர்த்து கலந்து வெண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும்.

அதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

Various Source

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இடியாப்ப குழாயில் ஸ்டார் அச்சு வைத்து மாவை வைத்து பிழிய வேண்டும்.

பொன்னிறமாக வந்ததும் எடுத்து எண்ணெய் வடிய டிஸ்யூவிலோ அல்லது சல்லடையிலோ வைக்க வேண்டும்.

இப்போது சுவையான மொறுமொறு பட்டர் நெய் முறுக்கு தயார்.