பாத வெடிப்பை மறைய செய்யும் 6 வீட்டு மருத்துவ முறைகள்..!

காலின் அழகை பாதிக்கும் பாத வெடிப்புகளை வீட்டில் எளிய நாட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்தி சரிசெய்து காலை வழுவழுப்பாக மாற்றலாம்.

Various Source

காலின் அழகை கெடுக்கும் விதமாக ஏற்படும் பாத வெடிப்புகள் வலியையும் தருகின்றன. வீட்டு சிகிச்சையிலேயே இதை சரி செய்யலாம்.

இரவு கால்களை நான்றாக கழுவி விட்டு, ஈரமில்லாமல் துடைத்து வெஜிடெபிள் ஆயில் தடவி வந்தால் பாத வெடிப்புகள் குறையும்.

தேங்காய் எண்ணெய்யுடன் சிறுது சர்க்கரை சேர்த்து கலந்து கால்களுக்கு மசாஜ் செய்துவர பாத வெடிப்புகள் சரியாகும்.

வெடிப்பு உள்ள பகுதிகளில் எழுமிச்சை பழத்தோலால் ஒருநாள் விட்டு ஒருநாள் தேய்த்து வந்தால் வெடிப்புகள் குறையும்.

பப்பாளி பழத்தை நன்றாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் மறைந்து கால்கள் வழுவழுப்பாகும்.

Various Source

வேப்பிலை, மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து அடிக்கடி தடவி வந்தால் வெடிப்புகள் மறையும், கால்கள் பளபளப்பாகும்.

Various Source

வாழைப்பழத்தை கூழாக்கி பாத வெடிப்பில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.