டேஸ்ட்டான சிக்கன் சமோசா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

சமோசா பலருக்கும் பிடித்தமான உணவாகும். சமோசாவுக்குள் விதம்விதமாக பல உணவுகளை ஸ்டப்பிங் செய்து சாப்பிடலாம். சுவையான சிக்கன் சமோசா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சிக்கன், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டாணி கிராம்பு, மைதா, பேக்கிங் பவுடர், நெய், கொத்தமல்லி

ஒரு பாத்திரத்தை மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து நெய் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

சிக்கனை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர் சிக்கனை சேர்த்து வதக்கவும்

சிக்கன் வெந்ததும் வேகவைத்த பட்டாணி சேர்த்து, உடன் மசாலா சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரி கட்டையில் வைத்து தேய்த்து முக்கோண வடிவமாக செய்யவும்.

அதில் தயார் செய்த சிக்கன் ஸ்டப்பிங்கை வைத்து மூடி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா தயார்.

Various Source