செட்டிநாடு காளான் தொக்கு செய்வது எப்படி?

காளானை வைத்து செய்யும் உணவு வகைகள் பலவும் மிகவும் சுவையானவை. செட்டிநாடு ஸ்டைலில் சுவையான காளான் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: காளான், பெரிய வெங்காயம், தக்காளி, தனியா தூள், மிளகு தூள், சீரகம், வரமிளகாய், பூண்டு, பட்டை, லவங்கம்,’

காளானை நன்றாக கழுவி நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும்

வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தனியா, மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டை வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் போட்டு தாளிக்க வேண்டும்.

Various source

அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கியபின் நறுக்கிய காளானை சேர்க்கவும்

தண்ணீர் சேர்க்காமல் காளானை வேகவிட்டு அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வேகவிடவும்.

5 நிமிடங்கள் மிதமாக வேகவிட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு காளான் தொக்கு தயார்.