குடைமிளகாய் சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா?

சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் காரம் அதிகமில்லாத குடைமிளகாய் தரும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

Social Media

வைட்டமின் சி, ஏ, ஈ, பி6 நிறைந்துள்ள குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது.

குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்க உதவும்.

கண் பார்வையை சிறப்பாக்கவும் இளமையிலேயே வரும் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடைமிளகாய் காக்கிறது.

குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

குடைமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது.

Social Media

எலும்பு இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்க குடைமிளகாய் பயன்படுகிறது.

Social Media

குடைமிளகாயில் கெட்ட கொழுப்பு இல்லை. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

Social Media

சிவப்பு குடைமிளகாயில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் உள்ளது. பச்சை குடமிளகாயை விட சிகப்பு குடளகாயில் மூன்று மடங்கு வைட்டமின் C அதிகம்.

Social Media