சாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்கலாமா?

சாப்பிடும்போது அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது பலருக்கு பழக்கமாக உள்ளது. இவ்வாறு உணவுக்கு இடையே அதிக தண்ணீர் குடிப்பது நல்லதா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

Pixabay

திடப்பொருட்களுடன் எந்த திரவத்தையும் கலக்கக்கூடாது. நீர் மற்றும் பிற திரவங்கள் செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்யலாம்.

உணவுடன் தண்ணீர் அல்லது திரவ நிலை உள்ள பொருட்களை பருகுவதால் உடல் எடையை அதிகரிக்கக்கூடுமாம்.

சாப்பிடும் போது திரவங்களை குடிப்பது உணவோடு சேர்த்து அதிக காற்றையும் விழுங்கச் செய்யும்.

உணவோடு பழச்சாறு அல்லது சோடா குடிப்பது உடலின் இன்சுலின் உற்பத்தியை பாதிக்க கூடும்.

Pixabay

இதே போல உணவின் போது தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்குமாம்.

Pixabay

மேலும், தண்ணீர் குடிப்பது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மெதுவாக்கலாம்.

எனவே தேவை எனும் பட்சத்தில் உணவிற்கு இடையில் தண்ணீர் மட்டும் பருகலாம். சோடா, பழச்சாறு போன்றவற்றை தவிர்க்கலாம்.