பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா?
பழங்களை உட்கொண்ட பிறகு ஏன் தண்ணீரை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Pexels
பழங்களை சாப்பிடப் பிறகு தாகம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் காத்திருப்பது நல்லது.
உணவியல் வல்லுநர்கள் பழங்களுக்கும் தண்ணீருக்கும் இடையில் 40-50 நிமிடங்கள் இடைவெளியை பரிந்துரைக்கின்றனர்.
இருப்பினும் அதிக தாகம் இருந்தால் பழங்களை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சிப் அல்லது இரண்டு சிப் குடிக்கலாம்.
பழங்கள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் வயிற்றின் pH நீர்த்துப்போகலாம், இதனால் வயிற்று வலி மற்றும் அஜீரணம் ஏற்படும்.
பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் பெரும்பாலான மக்கள் வயிற்றுப்போக்கை அனுபவிக்கக்கூடும்.
Pexels
பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் அத்தியாவசிய செரிமான நொதிகளை நீர்த்துப்போக செரிமான செயல்முறை மெதுவாக்கும்.
Pexels
குறிப்பாக ஆரஞ்சு, தர்பூசணி, பப்பாளி, அன்னாசி, ஸ்ட்ராபெரி, வெள்ளரி போன்ற பழங்களை சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
Pexels