மன அழுத்தத்தால் உருவாகும் இதய பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மன அழுத்த பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிலையில் இது ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்பட வழிவகுக்கிறது.

Various Source

தற்போதைய காலத்தில் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மூன்று வகை மன அழுத்தங்கள் உள்ளது.

அக்யூட் ஸ்ட்ரெஸ் என்பது பொதுவான ஒன்று. அரிதாக ஏற்படும் இந்த மன அழுத்தம் கொஞ்சம் நேரம் வரை நீடித்து பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கழுத்து வலி ஏற்படலாம்.

எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம் ஆகும். குறுகிய காலம் நீடிக்கும் இது ஆக்ரோஷம், பொறுமையற்ற தன்மையை ஏற்படுத்தும்.

க்ரோனிக் ஸ்ட்ரெஸ் நீண்ட காலம் நீடிக்கக் கூடிய மன அழுத்தம் ஆகும். வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம், மோசமான சம்பவங்களால் இது உருவாகிறது. இது இதயத்தை பலவீனப்படுத்தும்.

ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் என்பது கடும் மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய இதய நோய்களாகும்.

எப்போதும் சிரித்த முகத்துடன், நேர்மறை எண்ணங்களுடன் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

தினசரி உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை நீக்குவதுடன், இதய தசைகளை வலுப்படுத்தி நோய்கள் வராமல் தடுக்கும்.

Various Source

மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியமான உணவுகள் மன அழுத்தத்தை குறைக்கும்

Various Source

மன அழுத்தம் ஏற்படுபவர்கள் தாங்கள் எந்த வகையில் உள்ளார்கள் என்பதை அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Various Source