காலையில் குடிக்க சூப்பரான ப்ரக்கோலி டயட் சூப் செய்வது எப்படி?

சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளில் ப்ரக்கோலி தாவரமும் ஒன்று. பலரும் டயட் இருக்கும்போது ப்ரக்கோலி எடுத்துக் கொள்கின்றனர். ப்ரக்கோலியை வைத்து சூப்பரான சத்தான டயட் சூப் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: ப்ரக்கோலி, ஆலிவ் எண்ணெய், வெங்காயம், பூண்டு, பால், சோள மாவு, உப்பு, மிளகு

சோள மாவுடன் பாலை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய ப்ரக்கோலி சேர்க்கவும்.

ப்ரக்கோலி பச்சை வாசனை போகும் வரை வதக்கி தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் வேக விட வேண்டும்.

பின்னர் அதை எடுத்து நன்றாக மசியும் வரை ப்ளெண்ட் செய்து கடாயில் ஊற்ற வேண்டும்.

அதனுடன் கொஞ்சம் தண்ணீர், கலந்து வைத்த சோள மாவு பால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் நல்ல கொதிநிலையில் அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்தால் ஆரோக்கியமான ப்ரக்கோலி சூப் தயார்

Various source