கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் அற்புதமான 7 உணவுகள்..!

உடலில் உள்ள பாகங்களில் உணவை செரிக்கும் கல்லீரல் மிகவும் முக்கியமானது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை கடத்தும் கல்லீரலை குறிப்பிட்ட உணவுகள் மூலம் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

Various Source

மிதமான அளவில் காபி உட்கொள்வதால் கொலாஜன் மற்றும் கொழுப்பை தடுத்து கல்லீரலை பாதுகாக்க முடியும்.

ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவற்றில் உள்ள பாலிபீனால்கள் கல்லீரலை சேதமடையாமல் காக்க உதவுகிறது.

திராட்சை பழங்கள் சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம் குறைவதுடன் ஆக்ஸிஜனேற்ற அளவு அதிகரிக்கும்.

நார்ச்சத்து, பீட்டா குளுக்கன்ஸ் அதிகமாக உள்ள ஓட்ஸ் உணவானது கல்லீரலில் சேகரமாகும் கொழுப்பின் அளவை குறைக்கும்.

Various Source

பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் நிறைவுறா கொழுப்பு கெட்ட கொழுப்பை அகற்றவும், கல்லீரலை பாதுகாக்கவும் உதவுகிறது.

உணவில் தினசரி பூண்டு எடுத்துக் கொள்வது கல்லீரல் செயல்பாட்டை தூண்டுவதுடன் எடையை குறைக்கவும் உதவுகிறது.

முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் கல்லீரல் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகின்றன.