வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா??
பூண்டு சுவைக்காக உணவுகளில் சேர்க்கப்படுவது மட்டுமின்றி, இதில் பலவித மருத்துவ நன்மைகளும் உள்ளது.
Webdunia
பூண்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
காலை நேரத்தில் இரண்டு பல் பூண்டுகளை நசுக்கி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தினம் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலிலுள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் குறையும்.
Webdunia
பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவு, அல்சைமர் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயம் குறைகிறது.
Webdunia
தோலுரித்த பூண்டை 10 நாட்கள் தேனில் ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Webdunia