அவகோடா உண்பதால் என்ன பயன்?

மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம்.

Webdunia

இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கே1, பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.

உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது.

இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.

Webdunia

அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Webdunia

சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் இப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்.