தினமும் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா..?

உடல் இயக்கத்திற்கு உணவுகளை விடவும் அவசியமான ஒன்று தண்ணீர். தினம்தோறும் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தினம்தோறும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்..

Various Source

தினசரி குறைந்தது 3 லிட்டர், கோடைக்காலங்களில் 4-5 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் அருந்துவது உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.

தண்ணீர் அருந்துவதால் உடலின் மெட்டபாலிசம் என்னும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.

தசைகளில் தேங்கும் கழிவுகளை அகற்றவும், தசை பிடிப்பை போக்கவும் தண்ணீர் அருந்துவது அவசியம்.

Various Source

தண்ணீர் அருந்துவதன் மூலம் முகத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன் பருக்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

Various Source

உணவு செரிக்காமல் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை தண்ணீர் அருந்துவதன் மூலம் சரி செய்யலாம்

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தண்ணீர் சராசரியாக எடுத்துக் கொண்டால் குடலியக்கம் சரியாகி மலச்சிக்கல் தீரும்.

உடல் வறட்சி காரணமாக ஏற்படும் தலைவலி, சோர்வு நீங்க உடல் சுறுசுறுப்பாக தண்ணீர் குடிப்பது அவசியம்.