கல் உப்பு குளியல்... அப்பப்பா என்னா சுகம்!!

நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

Pexels

சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு அல்லது கல் உப்பில் தாதுக்கள் மிக குறைவு. இது தூய்மையானது.

கல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளது.

கல் உப்பை குளிக்கும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்க வேண்டும். இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவேண்டும்.

கல் உப்பு கலந்த குளிக்கும் தண்ணீரின் சூடு எப்போதும் குளிப்பக்கும் வெப்பநிலையிலிருந்து சற்று அதிகமான இருக்க வேண்டும்.

கல் உப்பு கலந்த தண்ணீரில் குளிக்கும் போது ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

அதோடு உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராவதால் பொலிவாகவும் தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

Pexels

உடலில் காயம், சரும பாதிப்புகள் இருந்தால் கல் உப்பு குளியலை தவிர்க்க வேண்டும்.

கல் உப்பு குளியலை நீங்கள் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

Pexels