பாலில் குங்குமப்பூ கலந்து குடிப்பது ஆபத்தானதா?

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான விளக்கம் இதோ...

Webdunia

குழந்தை கலராக பிறக்க கர்ப்பிணிகள் பலர் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கலராக குழந்தை வேண்டும் என்றால் குங்குமப்பூ சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை ஆகும்.

கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு அதிகமாக குங்குமப் பூ சாப்பிட்டால் அது கருவில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால் பெண்களிக்கு ஏற்படும் கர்ப்ப கால சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்க குங்குமப் பூ பெரிய உதவியாக இருக்கும்.

Webdunia

கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக இருக்கும் செரிமான பிரச்சனையை எளிதில் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது குங்குமப்பூ.

Webdunia

உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் குங்குமப் பூ, குழந்தையின் இதயத் துடிப்பை பாதுகாப்பாக வைக்கிறது.

குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கும் போது உடல் வெப்பநிலை சற்று உயர்வதால், குழந்தையின் அசைவுகளை எளிதாக உணர முடியும்.

Webdunia

குங்குமப்பூவை குடித்த பின்னர் வாய் வறண்டு போகுதல், தலைவலி, குமட்டல் போன்றவை ஏற்பட்டால் இதனை தவிர்ப்பது நல்லது.

Webdunia