இன்றைய காலகட்டத்தில் பலரும் அமர்ந்து வேலை செய்வதால் எளிதில் அடிவயிறு தொப்பை வந்து விடுகிறது. சில மருத்துவ குணமுள்ள பானங்களை அருந்துவதன் மூலம் இந்த தொப்பையை குறைக்க முடியும்.
Various source
இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை வடிக்கட்டி குடிக்கலாம்.
எலுமிச்சையை பிழிந்து தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாக குடித்து வர தொப்பை குறையும்.
சோம்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலை வெதுவெதுப்பாக சுட வைத்து குடிக்கலாம்.
காலையில் ப்ளாக் டீ குடிப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் கரைந்து தொப்பை குறைய உதவும்.
Various source
கேரட், பீட்ரூட், பாகற்காய் கலந்து காய்கறி சூப் செய்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும்.
Various source
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதில் க்ரீன் டீக்கும் முக்கியமான பங்கு உள்ளது.
கற்றாழையை சாறு பிழிந்து தண்ணீர் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும்.