வலிமை தரும் வாழைப்பூ கிரேவி செய்வது எப்படி?

வாழைத்தண்டு உடலுக்கு பல ஆரோக்கிய சத்துக்களை வழங்கக் கூடியது. வாழைத்தண்டை கூட்டு, பொறியல், சூப் என பல விதமாக செய்து சாப்பிடலாம். ருசியான வாழைப்பூ கிரேவி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையானவை: வாழைப்பூ, சின்ன வெங்காயம், புளி, எலுமிச்சை, கடுகு, தேங்காய் பால், சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு

வாழைப்பூவில் நரம்பு நீக்கி நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் புளியை வைத்து சில மணி நேரம் ஊறவைத்து புளி தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சின்ன வெங்காயம் போட்டு நன்று வதக்க வேண்டும்.

Various Source

பின்னர் அதில் சீரகம், உப்பு, மிளகாய் தூள் போட்டு நன்று வதக்க வேண்டும்.

Various Source

மிளகாய் தூள் வாசனை போகும் வரை வதக்கியபின் அதில் புளி தண்ணீரை சேர்த்து கலக்க வேண்டும்.

நன்றாக கொதி வந்ததும் அதில் வாழைப்பூவை போட்டு கொதிக்க விட வேண்டும்.

வாழைப்பூ நன்றாக வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கினால் சுவையான வாழைப்பூ கிரேவி தயார்.