மொறுமொறு பேபிகார்ன் 65 ஈஸியா செய்யலாம் வாங்க!

பேபிகார்ன் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் தற்போது ட்ரெண்டில் உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பேபிகார்ன் 65 செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: பேபி கார்ன், மைதா, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, சில்லி 65 மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை,

பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டி கழுவி எடுத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, கார்ன் ஃப்ளார், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் 65 மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதன் பின் அந்த கலவையில் தயிர், எலுமிச்சை சாறு விட்டு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

Various source

அதில் பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பேபி கார்ன் துண்டுகளை தனித்தனியாக போட்டு பொறிக்க வேண்டும்.

இரண்டு புறமும் சிவந்து வந்ததும் எடுத்து நறுக்கிய வெங்காயம் தூவி பறிமாறினால் சுவையான பேபிகார்ன் 65 தயார்.