ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி வீட்டிலேயே செய்யலாம்!

காலை டிபன் இட்லி, தோசையாக இருந்தால் பலரது விரும்பும் தொட்டுக் கொள்ள இட்லி பொடிதான். கமகமக்கும் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பூண்டு இட்லி பொடி வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு, உளுந்து, வர மிளகாய், பொட்டுக்கடலை, எள், கறிவேப்பிலை, பூண்டு, பெருங்காய பொடி,

கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளை ஒரு கப் தனித்தனியாக கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி 15 வர மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் எள், பொட்டுக்கடலை, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும், அதனுடன் உப்பு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி தயார். இட்லியோடு பொடி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.