அசர வைக்கும் ஆந்திரா மட்டன் கிரேவி சூப்பரா செய்யலாம்!

அசைவ சமையல்களில் ஆந்திரா வகை கார மசாலாக்கள் ரொம்பவே பிரபலமானவை. ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் கிரேவில் சுவையாக சூப்பராக செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மட்டன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மிளகு தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள்

அரைப்பதற்கு: ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம், பட்டை, மல்லி, மிளகு, சோம்பு

அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மட்டனை கழுவி மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

Various Source

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

அதனுடன் தக்காளி, மட்டன் சேர்த்து வதக்கி விட்டு அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

நல்ல கொதி வந்ததும் மிளகு தூள் தூவி இறக்கும்போது கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான சூப்பரான ஆந்திரா மட்டன் கிரேவி தயார்.

Various Source