ஆமணக்கு செடியின் அற்புதமான தெரியாத மருத்துவ நன்மைகள்!

நாட்டு மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற தாவரங்களில் ஒன்று ஆமணக்கு. ஆமணக்கு செடின் இலை, வேர் ஆகியவை பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பவை. ஆமணக்கின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

Various source

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு என்று மூன்று வகைகள் உள்ளது.

ஆமணக்கு வேருடன் தேன் கலந்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரை குடித்து வர ஊளைச்சதை குறையும்.

ஆமணக்கு வேரை பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை கொஞ்சம் சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்பு பெறும்.

ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி அரைத்து பசையாக்கி கட்டிகளின் மேல் கட்டி வர கட்டி பழுத்து உடையும்.

ஆமணக்கு இலை, கீழாநெல்லி இலையை அரைத்து எலுமிச்சை அளவு உருட்டி காலையில் சாப்பிட காமாலை நோய் குணமாகும்.

ஆமணக்கில் இருந்து பெரும் விளக்கெண்ணையை இஞ்சிசாறு கலந்து 3 தேக்கரண்டி சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

ஆமணக்கு இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பில் கட்டி வர தாய்மார்களுக்கு பால் சுரப்பு பெருகும்.