கரிசலாங்கண்ணி கீரையின் கணக்கற்ற அற்புத பயன்கள்!

கீரைகளிலேயே பல சத்துகளை வழங்கக்கூடியதும், மருத்துவ மூலிகையுமாக பயன்படும் கரிசலாங்கண்ணியையை ‘வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை’ என்றும் அழைப்பர்.

Various Source

மருத்துவ குணம் கொண்ட மூலிகையான கரிசலாங்கண்ணி கீரை, வெண்கரிசாலை, கையாந்தகரை என்ற பெயர்களில் கூறப்படுகிறது.

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து புண்கள், காயங்களில் தடவி வர விரைவில் ஆறும்.

கரிசலாங்கண்ணி, தும்பை, கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து கஷாயமாக குடித்து வந்தால் தொப்பை குறையும்.

புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் சக்தி கரிசாலங்கண்ணிக்கு உண்டு.

கரிசலாங்கண்ணி இலையை சாறாக்கி குடித்து வந்தால் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் மறைந்து மினுமினுப்பு கூடும்.

கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு குறையும்.