பெரும்பாலும் அவல் உணவுகளை பலர் விஷேச நாட்களில் செய்கின்றனர். ஆனால் 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த அவலை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various source
அவல் ஒரு மென்மையான உணவு. இதை சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாகும். அதிகம் பசிக்காது.
அவல் சாப்பிடுவதால் உடலில் அதிகபடியான கொழுப்பு சேர்வது குறைகிறது.
இதில் உள்ள 75 சதவீதம் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான தினசரி ஆற்றலை வழங்குகிறது.
நார்ச்சத்து நிறைந்த அவல் உணவு ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
Various source
அவலில் விட்டமின் பி நிறைந்துள்ளதால் இது தினசரி உங்களை சுறுசுறுப்பாக வைக்கிறது.
Various source
அவல் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்கி ரத்த சோகையில் இருந்து பாதுகாக்கிறது.
அவித்து தட்டி செய்யப்படும் அவல் உணவுகள் உடல் எடையை குறைக்கும் டயட்டிற்கு உதவும்.