காலையில் செய்ய சுவையான சத்தான திணை உப்புமா!

திணை சத்துமிக்க தானிய பயிராகும். திணையில் தோசை, உப்புமா என பல்வேறு வெரைட்டி உணவுகளை சமைக்கலாம். திணையில் சத்தான உப்புமா செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: திணை – 200 கிராம், கடலை பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பட்டை, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, உளுந்து

திணையை கடாயில் போட்டு லைட்டாக வறுத்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

Various source

வறுத்த பொருட்களோடு தண்ணீர் சேர்த்து நல்ல கொதி வந்ததும் ஊற வைத்த திணை, உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

ஆவி அடங்கிய பின் பாத்திரத்தை இறக்கி கொத்தமல்லி தூவி பறிமாறினால் சூப்பரான ஆரோக்கியமான திணை உப்புமா தயார்.