எனக்கே தெரியாம எனக்கு லவ்வரா? அதிர்ச்சியில் வர்ஷா பொல்லம்மா!

பிரபல தயாரிப்பாளரின் மகனை காதலிப்பதாக எழுந்த கிசுகிசுவுக்கு வர்ஷா நச் பதில்

Instagram

தமிழில் ’வெற்றிவேல்’, ‘செல்பி’, ‘பிகில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா.

கர்நாடகாவில் பிறந்த வர்ஷா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில் இவரை ‘குட்டி நஸ்ரியா’ என செல்லமாக அழைக்கின்றனர்.

சமீபமாக வர்ஷா பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் மகனை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வர்ஷா அந்த தகவல் பொய் என்று மறுத்துள்ளார்.

Instagram

மேலும் ”எனக்காக மாப்பிள்ளை தேர்வு செய்ததற்கு நன்றி. அது யார் என்று சொன்னால் குடும்பத்திடம் பேச வசதியாக இருக்கும்” என கூறியுள்ளார்.

Instagram

அவரது இந்த கிண்டல் பதிவு தற்போது ட்ரெண்டாகியுள்ளது.