லீக் ஆன ‘வாரிசு’ சீன்! படக்குழுவை விரட்டியடித்த விஜய்?

விஜய் நடித்து வெளியாகவுள்ள வாரிசு படத்தின் காட்சிகள் வெளியானதால் விஜய் அப்செட்!

Twitter

நடிகர் விஜய் நடித்து வம்சி இயக்கியுள்ள படம் ‘வாரிசு’. இந்த படம் தெலுங்கில் ’வாரசடு’ என்ற பெயரிலும் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கில் பொங்கல் அன்று வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

முன்னதாக கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பு உள்ளிட்ட சில வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தன.

இதனால் தொழில்நுட்ப கலைஞர்களை ஸ்பாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு முக்கியமான சிலரை மட்டும் வைத்துக் கொண்டு நடித்தாராம் நடிகர் விஜய்

Twitter

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு வாரிசு படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

Twitter

அதில் கோட் சூட்டில் விஜய் வரும் காட்சிகள், சுரங்கத்தின் அருகே ஹெலிகாப்டர் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.

Twitter

தொடர்ந்து படப்பிடிப்பு வீடியோக்கள் லீக் ஆகிக் கொண்டே இருப்பதால் அப்செட் ஆகியுள்ளாராம் நடிகர் விஜய்.