வாரிசு படத்தின் கதை என்ன? படம் நல்லா இருக்கா?

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் கதை மற்றும் திரைவிமர்சனம்

Sri Venkateswara Creations

சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள்.

தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். மூன்று மகன்களில் ஒருவரை போட்டி வைத்து தொழில் வாரிசாக அறிவிக்க நினைக்கிறார்.

இது பிடிக்காத விஜய், தந்தை சரத்குமாருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சரத்குமாருக்கு 60-வது திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. தாயின் கட்டாயத்தின் பெயரில் மீண்டும் வீட்டுக்கு வருகிறார் விஜய்.

தன்னுடைய வாரிசாக விஜய்யை அறிவிக்கிறார் சரத்குமார். இதனால், அண்ணன்கள் இருவரும் விஜய்க்கு எதிராக திரும்புகிறார்கள்.

இறுதியில் பிரிந்த குடும்பத்தை விஜய் ஒன்று சேர்த்தாரா? இல்லையா? தொழிலில் ஏற்படும் வில்லன்களை வென்றாரா? என்பது மீதி கதை

வழக்கம்போல விஜய் தனது நடிப்பு, டான்ஸ், வசனங்கள், ஆக்ஷன்கள் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்.

ராஷ்மிகா அளவான நடிப்பும், பாடல்களுக்கு அதிகளவு க்ளாமரும் காண்பித்திருக்கிறார்.

தந்தையாக நடித்த சரத்குமாரும், அண்ணன்களாக ஸ்ரீகாந்த், ஷ்யாம் சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர். ஒரு காட்சியில் வந்தாலும் கைத்தட்டல் வாங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா

குடும்பம், பாசம் என மெல்ல தொடங்கும் கதை காமெடி, ஆக்ஷன் என பரபரப்பாக நகரும் வகையில் சிறப்பாக இயக்கியுள்ளார் வம்சி.

மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு நிஜமான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்துள்ளது வாரிசு