மூன்றாம் உலகப்போர் இதுனாலதான்..? – ”சர்தார்” விமர்சனம்!

கார்த்தி நடித்து வெளியாகியுள்ள சர்தார் திரைப்படம் எப்படி இருக்கிறது?

Twitter

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தை நடித்துள்ள படம் சர்தார்.

இந்தியாவுக்காக ஒருசமயத்தில் உளவாளியாக வேலை பார்த்தவர் சர்தார். சில காரணங்களுக்காக அவர்மேல் தேசத்துரோக முத்திரை குத்தப்படுகிறது.

அவரது மகனான விஜய் பிரகாஷ் போலீஸாக பணிபுரிகிறார். அவர் எவ்வளவுதான் சாதனைகள் செய்தாலும் தேசத்துரோகியின் மகன் என்ற முத்திரை குத்தப்படுகிறது.

இந்நிலையில் தனது தந்தை தேசத்துரோகிதானா? அவர் என்ன ஆனார்? என்பதை கதையோட்டத்தில் விஜய் பிரகாஷ் தேடி செல்வது பரபரப்பான 2 மணி நேரம் 45 நிமிடங்கள் கொண்ட கதை.

கார்த்தி – ராஷி கண்ணா இடையேயான காதல் காட்சிகள் வொர்க் அவுட் ஆகியுள்ளன. ஜிவி பிரகாஷின் இசை சிறப்பாக உள்ளது.

Twitter

ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, ரூபனின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம்.

பரபரப்பாக தொடங்கும் முதல் பாதிக்கு எதிர்பார்க்கக்கூடிய அளவிலேயே இரண்டாம் பாதி உள்ளது.

தண்ணீர் பற்றி அரசியல், மூன்றாம் உலகப் போரே தண்ணீரால் நடக்கக்கூடியதற்கான சமூக அக்கறை கொண்ட தகவல்களை படம் பேசுகிறது.

தீபாவளி ரிலீஸ் படங்களில் கவனிக்கத்தக்க, முக்கியமான முயற்சியாக சர்தார் உள்ளது.