மருத்துவமனையில் சமந்தாவுக்கு சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோய் காரணமாக சிகிச்சை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

Twitter

இந்நிலையில் அவர் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சமந்தாவின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே சமந்தா விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சமந்தா தரப்பினர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது.

Twitter

சமந்தா வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் நல்ல படியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Twitter

சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் தகவலை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Twitter