பட வாய்ப்புக்காக கவர்ச்சி? சாக்ஷி அகர்வால் விளக்கம்

தமிழில் ரஜினிகாந்துடன் காலா, அஜித்குமாரின் விஸ்வாசம், சுந்தர் சி.யின் அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.

Twitter

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாகவும் விமர்சனம் எழும்பியது.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடவில்லை.

என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்.

இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன் என்றார்.

தற்போது பஹிரா, நான் கடவுள் இல்லை, கெஸ்ட்-சாப்டர் 2, கந்தகோட்டை, 2 மலையாள படங்களில் நடிக்கிறார்.

சாக்ஷி அகர்வால்