உங்கள சந்தோஷப்படுத்த என்ன செஞ்சேன் தெரியுமா?

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக வெளியிட்ட பதிவு!

Instagram

ரசிகர்களால் ‘நேஷனல் க்ரஷ்’ என செல்லமாக அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா.

தற்போது ராஷ்மிகா விஜய்யின் ‘வாரிசு’, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீப காலமாக அவர் குறித்த எதிர்மறையான கருத்துகள் அதிகரித்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.

”கடந்த சில காலமாகவே என் மீதான எதிர்மறை கருத்துகள் பரப்பப்படுவது என்னை தொந்தரவும் மன வேதனையும் அடைய செய்துள்ளது”

“உங்கள் அனைவரையும் மகிழ்விக்க நான் எந்த வகையான வேலைகளை செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்”

Instagram

” நீங்களும் நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்”

Instagram

” இணையத்தில் என்னைப்பற்றி பரப்பப்படும் தவறான செய்திகள் எனக்கும், வெளியில் உள்ள உறவுகளுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்”

Instagram

” எல்லோரும் அன்பாக இருங்கள். ஏனென்றால் நான் சொன்னது போல், உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.