சோழ ரத்தம் குடிக்கும் வால்மீன்! – பொன்னியின் செல்வன் விமர்சனம்!

மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனம்

Twitter

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.

கல்கி எழுதி நாவலாக வெளியான இந்த கதை 70 ஆண்டுகள் கழித்து படமாக வெளிவந்துள்ளது.

சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் சுந்தரசோழர் நோய்வாய்ப்பட்டு தஞ்சையில் இருக்கிறார். அவரது மகன்களான ஆதித்த கரிகாலனும், அருள்மொழி வர்மனும் ஆளுக்கு ஒருபுறம் போரில் இருக்கின்றனர்.

அந்த சமயம், வானில் ஒரு வால்நட்சத்திரம் உண்டாகிறது. இந்த வால்நட்சத்திரம் மறையும் முன் சோழ ரத்தம் ஒன்றை பலி கொள்ளும் என்பது கூற்று.

சோழ சாம்ராஜ்யத்தை வஞ்சமும், துரோகமும் சூழ்ந்துள்ள நிலையில் தனது சகோதரர்களை தஞ்சை வரவழைத்து சோழ நாடு உள்நாட்டு போர்களால் அழியாமல் தடுக்க திட்டமிடுகிறாள் அவர்களது தங்கையும், இளவரசியுமான குந்தவை.

Twitter

நந்தினி, முன்னொரு சமயம் தனது காதலன் வீரபாண்டியனை தலையை வெட்டிக் கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்ல பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.

Twitter

அப்போதுதான் ஆதித்த கரிகாலனிடமிருந்து சேதி கொண்டு வருகிறான் படத்தின் நாயகன் வந்தியத்தேவன். அவனை இலங்கை சென்று அருள்மொழியை அழைத்து வர அனுப்புகிறாள் குந்தவை.

அதேசமயம் அருள்மொழியை கொல்ல பாண்டிய ஆபத்துதவிகளும், கைது செய்ய பழுவேட்டரையரின் படைகளும் இலங்கை செல்கின்றன.

இந்த கொலை மற்றும் சதிகளிலிருந்து அருள்மொழி தப்பினாரா என்பது சுவாரஸ்யமான இரண்டாம் பாதி.

குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களை சுற்றி மற்ற கதாப்பாத்திரங்களை சரியாக கொண்டு வந்து சேர்த்துள்ளார் மணிரத்னம்.

Twitter

பிண்ணனி இசையில் ஏ.ஆர்.ரகுமான் தனது திறமையை வழக்கம்போல காட்டியுள்ளார். ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் செட் வேலைகள் சிறப்பாக இருந்தன.

Twitter