நானே வருவேன் - விமர்சனம்!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நானே வருவேன் படத்தின் Short விமர்சனம்

Twitter

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் ‘நானே வருவேன்’.

நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவன் – தனுஷ் – யுவன் காம்போவில் அமையும் படம் இது.

ஒரு ஊரில் பிரபு, கதிர் என்ற இரட்டையர்கள். பிரபு நல்லவன். கதிர் கெட்டவன்.

பிரபு திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான். அவன் குழந்தைக்கு சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன.

இதை தெரிந்து கொள்ளும் பிரபு தனது குழந்தையை இந்த அமானுஷ்யங்களிலிருந்து காப்பாற்ற சில விஷயங்களை தேடுகிறார்.

Twitter

அவர் அந்த தேடிய விஷயத்தை கண்டடைந்தாரா? குழந்தையை காப்பாற்றினாரா? என்பது சுவாரஸ்யமான கதை.

Twitter

வில்லன் கதிர் கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் பட்டையை கிளப்பியுள்ளார்.

Twitter

யுவன் சங்கர் ராஜாவின் பிண்ணணி இசை அமானுஷ்யமான கதை களத்தை மேலும் அமானுஷ்யம் ஆக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

Twitter

நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் ஸ்டைலில் ஒரு படம். ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் மெல்ல நகர்வது அலுப்பை தருகிறது.