மிருகமாய் மாறிய சசிக்குமார்! நான் மிருகமாய் மாற எப்படி இருக்கு?
சசிக்குமார் நடித்து சத்யா சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள நான் மிருகமாய் மாற படத்தின் விமர்சனம்.
Twitter
சவுண்ட் இன்ஜினியரான சசிக்குமார் தனது மனைவி, தம்பி, அம்மா, அப்பா என குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
ஒருநாள் சசிக்குமாரை அவரது தம்பி அழைக்க செல்ல, அந்த சமயம் ரவுடி கும்பல் ஒன்று ஒருவரை கொல்ல விரட்டுகிறது.
அந்த ரவுடிகளிடமிருந்து அந்த நபரை சசியின் தம்பி காப்பாற்ற, இதனால் அந்த ரவுடி கும்பல் சசியின் தம்பியை கொன்று விடுகின்றனர்.
இதனால் அந்த ரவுடி கும்பலை பழி வாங்க துடிக்கும் சசி ஒவ்வொரு ரவுடியாக கொல்லத் தொடங்குகிறார்.
இதனால் ரவுடி கும்பலாம் சசியின் குடும்பத்திற்கு ஆபத்து நேரும் நிலை உருவாகிறது.
Twitter
அந்த ரவுடிகளை அழித்து சசி தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பது மீதக் கதை.
Twitter
வழக்கமான பழிவாங்கும் படம்தான் என்றாலும் ஏற்கனவே பார்த்து சலித்த காட்சிகளால் படம் மெல்ல சோர்வடைய செய்கிறது. சசி ஒருவரே மொத்த படத்தையும் தாங்குகிறார்.
சில நெருடல்கள் இருந்தாலும், ஆக்ஷன், ஒளிப்பதிவு, பாடல்களற்ற பரபரப்பான கதை மூலம் கூடிய மட்டும் சுவாரஸ்யத்தை படம் அளிக்கிறது.