த்ரில்லரில் வேற லெவலா இருக்கு! ‘மிரள்’ திரை விமர்சனம்!

பரத் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மிரள்’ படத்தின் விமர்சனம்

Twitter

நாயகன் பரத், தனது மனைவி வாணி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

வாணி போஜனுக்கு அமானுஷ்யமான கனவுகள் சில வந்து பயமுறுத்துகிறது. அதேசமயம் நாயகன் பரத்தும் ஒரு கார் விபத்தில் சிக்கி தப்பிக்கிறார்.

இதனால் குல தெய்வத்திற்கு கிடா வெட்டி சாமி கும்பிட வேண்டுமென தனது கிராமத்திற்கு பரத்தை அழைக்கிறார் வாணி.

கிராமத்திற்கு சென்ற பின் அவசர வேலையாக மீண்டும் திரும்பும் பரத்தை முகமூடி அணிந்த மனிதன் தாக்கி, பரத்தின் மனைவியையும், மகனையும் கடத்துகிறான்.

அந்த மர்ம மனிதன் யார்? பரத் குடும்பத்தை குறி வைக்க காரணம் என்ன? தனது குடும்பத்தை பரத் காப்பாற்றினாரா? என்பது பரபரப்பான த்ரில்லர் கதை.

Twitter

படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் ட்விஸ்ட் திரில்லர் படங்களுக்கே உரித்தான விதத்தில் எதிர்பாராத வகையில் அமைந்திருந்தது.

Twitter

சிம்பிளான கதையை எடுத்து பரபரப்பான திரில்லராக மாற்றி அசத்தியுள்ளார் இயக்குனர் சக்திவேல்.

Twitter