செல்போன பாத்தா முடிஞ்ச்..! லவ் டுடே விமர்சனம்!

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கும் ‘லவ் டுடே’ படம் எப்படி இருக்கு?

Twitter

ப்ரதீப்பும், இவானாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இது இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வருகிறது.

இருவரையும் அழைத்து பேசும் அவர் ஒருநாள் மட்டும் இருவரும் தங்கள் செல்போனை மாற்றி வைத்துக் கொள்ள சொல்கிறார்.

இவானாவின் செல்போனில் உள்ள மெசேஜ்களால் ப்ரதீப் அதிர்ச்சியாகிறான். அதுபோல இவானாவும் ப்ரதீப் செல்போனில் உள்ளவற்றை கண்டு அதிர்ச்சியாகிறாள்.

இது ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்குமிடையே சண்டை, பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சினைகளை சரி செய்து அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது சுவாரஸ்யமான நகைச்சுவையான முழுநீள திரைப்படம்.

Twitter

அறிமுகமாக இருந்தாலும் நடிப்பில் கலக்கியுள்ளார் இயக்குனர் ப்ரதீப். இவானாவும் தேவையான நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார்.

Twitter

யுவனின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளது. முழுவதும் காமெடியுடன் யோசிக்கவும் வைக்கும் விதத்தில் எழுதப்பட்ட திரைக்கதை அருமை.

Twitter