என்னையும் அங்க கூட்டிட்டு போ! கீர்த்தியிடம் கேட்ட ஷ்ரேயா!

திருநெல்வேலியில் உள்ள தனது மூதாதையர் ஊருக்கு சென்ன கீர்த்தி சுரேஷிடம் ஸ்ரேயா வைத்த கோரிக்கை!

மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேனகாவின் மகள்.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் கேரளாவில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள தனது மூதாதையர் ஊருக்கு சென்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள மூதாதையர் வீடு, நம்பி கோவில் போன்றவற்றிற்கு அவர் சென்றார்.

Instagram

அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த நடிகை ஸ்ரேயா ‘என்னையும் என் கணவரையும் அங்கே அழைத்து செல்லுங்கள்’ என கேட்டுள்ளார்.

Instagram

கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Instagram