ரெடியாகிறது சர்தார் 2? பார்ட் 2-வில் கொடிக்கட்டி பறக்கும் கார்த்தி

கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சர்தார்.

Twitter

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் ராணுவ உளவாளியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதனால் சர்தார் 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இதுகுறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், சர்தார் படம் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர்.

எனவே சர்தார் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார் கார்த்தி.

கார்த்தியின் கைதி,பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து சர்தார் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.