சீறி வரும் காரி! எப்படி இருக்கு சசிக்குமாரின் ‘காரி’?
சசிக்குமார் நடித்து வெளியாகியுள்ள ‘காரி’ படத்தின் சுருக்கமான விமர்சனம்
Prince Pictures
சென்னையில் ரேஸ்கோர்ஸ் குதிரைகளை பழக்கும் சசிக்குமார், யாராலும் வெல்ல முடியாத அளவு ஒரு குதிரையை தயார் செய்கிறார்.
ஆனால் நண்பனுக்காக அந்த குதிரையை தோற்க செய்ய, குதிரையின் முதலாளி அந்த குதிரையை சுட்டு கொன்று விடுகிறார்.
தந்தையும் இறந்துவிடுவதால் சொந்த ஊருக்கு செல்கிறார் சசி. அங்கு ஊர் கோவிலுக்காக இரண்டு கிராமங்கள் இடையே சண்டை நடக்கிறது.
இதற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி தீர்வு காண முடிவு எடுக்கப்படுகிறது. 18 வகை மாடுகள் கலந்து கொள்ளும் போட்டியில் சசி களமிறங்குகிறார்.
அவர் ஜல்லிக்கட்டில் வென்றாரா? இரண்டு கிராமங்களையும் ஒன்று சேர்த்தாரா? இதற்கு தடையாக இருக்கும் வில்லன் யார்? என்பது விறுவிறுப்பான கதை
Prince Pictures
சசிக்குமார் தனது அலட்டல் இல்லாத நடிப்பால் கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். நாயகி பார்வதி அருண் – சசி இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளன.
Prince Pictures
கிராமம், அது சார்ந்த கலாச்சாரங்கள் மற்றும் பிரச்சினைகளை அணுகும் விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.