என் பெயரை சின்னாபின்னமாக்குறாங்க! வேதனையில் ராஷ்மிகா மந்தனா!
கன்னட திரையுலகில் தடை விதிக்க உள்ளதாக வெளியான வதந்தியால் ராஷ்மிகா வேதனை!
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடித்துள்ள விஜய்யின் ‘வாரிசு’, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
சமீபத்தில் ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமதித்து பேசியதாகவும், அதனால் கன்னட தயாரிப்பாளர்கள் ராஷ்மிகாவுக்கு தடை விதிக்க உள்ளதாகவும் புரளி பரவியது.
இதனால் வேதனையடைந்துள்ள ராஷ்மிகா “நான் பேசாத விஷயங்கள் பற்றி என் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன..”
“இப்படி வரும் தவறான செய்திகளால் சினிமாவிலும், தனி வாழ்விலும் பெரும் பாதிப்புகளை காண்கிறேன்..”
Instagram
“.. நல்ல விமர்சனங்கள் என்னை எப்போது மெருகேற்றும். ஆனால் ஆதாரம் இல்லாத விமர்சனங்களை எதிர்கொள்ள கஷ்டமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Instagram