மெர்சலாக்கிய இந்திய படங்கள்! IMDb-ன் டாப் 10 படங்கள் இதுதான்!

2022ல் வெளியாகி அதிகமான ரேட்டிங் பெற்ற டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட்!

Various Source

ஆர்ஆர்ஆர் (8.0/10) – இந்திய சுதந்திரத்திற்காக போராடும் கோமரம் பீம், அல்லூரி சீதாராமன் என்ற இரு நண்பர்களின் கதை.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் (8.3/10) – காஷ்மீரில் இந்து பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி உருவான படம்.

கேஜிஎஃப் சாப்ட்டர் 2 (8.4/10) – கேஜிஎஃப் தங்கத்தை வைத்து உலகை ஆளும் ராக்கி பாயின் எழுச்சியும், வீழ்ச்சியும் ஆக்ஷன் கலந்து சொல்லப்பட்ட கதை

விக்ரம் (8.4/10) – போதை பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க போதை கும்பலை ஒழிக்க கிளம்பிய முன்னாள் சீக்ரெட் ஏஜெண்ட் விக்ரமின் ஆக்ஷன் அதிரடி கதை

காந்தாரா (8.6/10) – காட்டை காக்கும் கடவுளான பஞ்சுருளி, குளிகாவின் நம்பிக்கைகள் கலந்து சொல்லப்பட்ட மக்கள் நம்பிக்கையின் கதை.

Various Source

ராக்கெட்ரி (8.8/10) – இஸ்ரோ விஞ்ஞானி நம்பிராஜனின் சாதனைகளும், அவர் சந்தித்த இன்னல்களையும் உணர்வுபூர்வமாக சொன்ன படம்.

Various Source

மேஜர் (8.2/10) – இந்திய ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் உத்வேக பயணத்தை பற்றிய வாழ்க்கை வரலாற்று படம்

Various Source

சீதா ராமம் (8.6/10) – ராணுவத்தில் பணியாற்றும் நாயகனுக்கும், இஸ்லாமிய இளவரசிக்கும் இடையேயான காதலை போரூற்றி எழுதிய படம்.

பொன்னியின் செல்வன் (7.9/10) – வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை தழுவி சோழ வரலாற்றை திரையில் கொண்டு வந்த சரித்திர படம்

777 சார்லி (8.9/10) – விலங்குகள், மனிதர்களுக்கிடையேயான உறவை, அன்பை உணர்வுபூர்வமாக எடுத்து சொன்ன படம்

Various Source