கணவனிடம் குஸ்தி போடும் மனைவி! எப்படி இருக்கு ‘கட்டா குஸ்தி’?
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்து வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஷார்ட் விமர்சனம்.
Twitter
பிரபலமான கட்டா குஸ்தி வீரராக முயன்று தோற்றவர் முனீஸ்காந்த். அவரது அண்ணன் மகள் ஐஷ்வர்யா லக்ஷ்மி.
தனது சித்தப்பா போல கட்டா குஸ்தி வீராங்கனையாக மாற பயிற்சி எடுக்கிறார் ஐஷ்வர்யா. ஆனால் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள்.
அவருக்கு வரும் மாப்பிள்ளைகள் எல்லாம் ஓடி போக, எதேச்சையான விஷ்ணு விஷாலை சந்திக்கும் முனீஸ்காந்த் அவரை ஐஷ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
பெண்கள் அடக்கம், ஒடுக்கமாக இருக்க வேண்டும் என விஷ்ணு விஷால் நினைப்பதால் தனது ‘கட்டா குஸ்தி’ பற்றி ஐஷ்வர்யா மறைத்துவிடுகிறார்.
ஆனால் திருமணத்திற்கு பின் கணவனை அடிக்க வரும் வில்லனை ஐஷ்வர்யா பந்தாட, விஷ்ணு விஷாலுக்கு உண்மைகள் தெரிய வருகிறது.
Twitter
இதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஐஷ்வர்யா மீண்டும் குஸ்தி பயிற்சி செய்கிறார். தனது மனைவியை வீழ்த்த விஷ்ணு விஷாலும் பயிற்சி செய்கிறார்.
Twitter
விஷ்ணு விஷால் இந்த குஸ்தியில் ஜெயித்தாரா? பிரிந்த அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது காமெடி கலந்த க்ளைமேக்ஸ்.
அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ள நிலையில் காமெடி, செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் சரியாக செட் ஆகி சிறப்பான அனுபவத்தை தருகிறது.