'எதிர்நீச்சல்' புகழ் மாரிமுத்து மரணம்
'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56.
Social Media
தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தார் .
ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி , எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
Social Media
பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியவை.
Social Media
சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.
Social Media
இன்று காலை சீரியல் டப்பிங்கின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு தானாகவே மருத்துவமனைக்கு சென்ற இவரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.
நடிகர் மாரிமுத்துவின் உடல் மதியம் 3 மணி வரை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின் தேனி எடுத்து செல்லப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசும் இந்தாம்மா ஏய் எனும் டயலாக மிகவும் பிரபலம். இவருக்காகவே அந்த சீரியலை பலர் கண்டுகளித்தனர்.