ப்ளாக் பாந்தர் இன்னும் சாகல? எப்படி இருக்கு வகாண்டா ஃபாரெவர்?

மார்வெல் சூப்பர்ஹீரோ படமான ப்ளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர் படத்தின் விமர்சனம்

Marvel

மார்வெல் ஸ்டுடியோஸின் பிரபலமான சூப்பர் ஹீரோ ப்ளாக் பாந்தர். இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘வகாண்டா ஃபாரெவர்’ தற்போது வெளியாகியுள்ளது.

வகாண்டாவின் அரசனும், நடப்பு ப்ளாக் பாந்தருமான டி சாலா புற்றுநோய் வந்து இறந்து போகிறார். அண்ணனை காப்பாற்ற முடியாததால் தங்கை ஷூரி வருத்தமடைகிறாள்.

வகாண்டாவில் உள்ள வைப்ரேனியத்தை திருட உலக நாடுகள் முயல அவர்களை தடுக்கு டி சாலாவின் தாய் வகாண்டாவின் ராணியாக பொறுப்பேற்கிறார்.

அதே சமயம் கடலுக்கடியில் வைப்ரேனியம் கிடைக்க அதை எடுக்க போனவர்களை கடலுக்குள் வாழும் அபூர்வ மனிதர்கள் தாக்குகிறார்கள்.

இதை வகாண்டியன்ஸ் செய்ததாக உலக நாடுகள் நினைக்கிறது. தங்கள் ரகசியத்தை பாதுகாக்குமாறு கடல் வாழ் மனிதர்களின் தலைவன் நமோர் வகாண்டாவிடம் வேண்டுகிறான்.

Marvel

ஆனால் நமோரின் தீய எண்ணங்களுடன் இணைந்து செயல்பட வகாண்டா மறுக்கவே, வகாண்டாவை நமோர் தாக்குகிறான்.

Marvel

வகாண்டாவை காப்பாற்ற ப்ளாக் பாந்தரால்தான் முடியும் என்ற நிலையில் புதிய ப்ளாக் பாந்தர் எப்படி உருவாகிறார்? நமோரை வகாண்டா தோற்கடித்ததா? என்பது மீத கதை

Marvel

வழக்கம்போல ஆக்ஷன், நடிப்பு, கதை, கிராபிக்ஸ் எதிலும் பிரம்மாண்டம். முதல் பாதி சற்று தொய்வு. இரண்டாம் பாதி அட்டகாசம்.